
நான் எப்போதும் தோல்விகள் என்னை வரையறுக்க விட்டதில்லை. ஒரு தேர்வோ, ஒரு செயல் திட்டமோ அல்லது வாழ்க்கையில் ஏதேனும் பின்னடைவோ ஏற்பட்டு ஒரு தோல்வியை அனுபவிக்கும் போது, அதன் விளைவாக பயம், பதட்டம் மற்றும் ஏமாற்றம் ஏற்படுவது சாதாரணமே. ஆனால் அத்தோல்வியினால் சோர்வடைந்து விடாமல் தொடர்ந்து செயல்பட்டு வெற்றி காண்பது அவசியம்
தோல்வியை ஏற்கவும் எதிர் கொள்ளவும் சில வழிகள் உள்ளன. அவற்றில் இரண்டு முக்கியமானவை:
- தோல்வியை ஒரு கற்றல் வாய்ப்பாக மாற்றுங்கள்
கல்வி உளவியல் பற்றிய ஆராய்ச்சிகள், தோல்வியை வளர்ச்சிக்கான வாய்ப்பாக (growth mindset) பார்க்கும் நபர்கள், அதிகமான மனவுரனையும் சிறந்த செயல்திறனையும் காண்பிக்கின்றனர் எனக் கூறுகின்றன.
ஒரு பின்னடைவு ஏற்பட்ட பிறகு, உங்களை நீங்களே கேளுங்கள்: “நான் என்ன கற்றுக்கொண்டேன்?” அல்லது “அடுத்த முறை நான் என்ன வித்தியாசமாகச் செய்யப்போகிறேன் ” இக் கேள்விகளுக்கான பதில் உங்களை வெற்றிப் பாதையில் உந்தித் தள்ளும். - சுய இரக்கம் பயிலுங்கள்
Positive Psychology துறையில் Kristin Neff மற்றும் பிறரின் ஆய்வுகள், சுய இரக்கத்தைப் பயிற்சி செய்வதன் மூலம் பதட்டம் குறைகின்றது மற்றும் தோல்விக்குப் பின் உள உரனை அதிகரிக்கின்றது எனக் கூறுகின்றன.
உங்களை நீங்களே ஒரு நெருங்கிய நண்பரைப் போல் மென்மையாகப் பேசுங்கள். உங்கள் ஏமாற்றத்தை அங்கீகரியுங்கள். “நான் ஏமாற்றமடைவது சரிதான். ஆனால் நான் எனது முழு முயற்சியில் ஈடுபட்டேன்” என உங்களுக்கு உரிய அங்கீகாரத்தை நீங்களே வழங்கிக் கொள்ளுங்கள். இது மீண்டும் உற்சாகத்துடன் முயற்சி செய்ய உங்களுக்கு உதவும்.

Leave a comment